ரெட்வுட் சிட்டி,
சிலிகான் வேலி ஓபன் ஸ்குவாஷ் பட்டம் வென்று கடந்த ஆண்டின் தோல்விக்கு சிவசங்கரி பழிதீர்த்தார்.
2026 சிலிகான் வேலி ஓபன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்றது. இதில், மலேசியாவின் முன்னணி ஸ்குவாஷ் வீராங்கனை எஸ். சிவசங்கரி, எகிப்தின் பரிடா முகமதுவை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள சிவசங்கரி, 20-வது இடத்தில் இருக்கும் பரிடாவை 11-7, 11-6, 11-8 என்ற கணக்கில் வீழ்த்தி பட்டத்தை வென்றார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற சிலிக்கான் வேலி ஓபன் இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் ஒலிவியா வீவரிடம் தோல்வியடைந்த சிவசங்கரி, இந்த ஆண்டு பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
கடந்த மாதம் ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கத்தை தக்கவைத்த சிவசங்கரி, மலேசிய மகளிர் அணி தங்கம் வெல்லவும் உதவினார். இதன், மூலம் 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் அவர் தகுதி பெற்றுள்ளார்.