பிற விளையாட்டு

மலேசியா ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் லோகேஷ் சுப்பிரமணி

மலேசியா ஜூனியர் ஸ்குவாஷ் ஓபன் தொடர் கோலாலம்பூரில் நடைபெற்றது.

கோலாலம்பூர்,

மலேசியா ஜூனியர் ஸ்குவாஷ் ஓபன் தொடரில், இந்திய வீரர் லோகேஷ் சுப்பிரமணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

இறுதிப்போட்டி

மலேசியா ஜூனியர் ஸ்குவாஷ் ஓபன் தொடர் கோலாலம்பூரில் நடைபெற்றது. இதில், ஆண்கள் 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு இறுதிப்போட்டியில், இரண்டாம் நிலை வீரரான லோகேஷ் சுப்பிரமணி, மலேசியாவின் முகம்மது இப்வத் ஜுல்கிப்லியை எதிர்கொண்டார்.

கோப்பையை கைப்பற்றினார்

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய லோகேஷ், 11-6, 11-2, 11-8 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார்.

SCROLL FOR NEXT