பிற விளையாட்டு

மாநில அளவிலான சிலம்பம் போட்டி: 2-வது இடம் பெற்ற கல்லூரி மாணவிக்கு பாராட்டு

மாநில அளவில் சாதனை படைத்த மாணவியை கல்லூரி முதல்வர், செயலர் உள்ளிட்ட பலர் பாராட்டி வருகின்றனர்.

தக்கலை,

ஈரோடு மாவட்டத்தில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. இதில் முளகுமூடு குழந்தை இயேசு மகளிர் கல்லூரி மாணவி பிபிஸ் மாறோஸ் 2-வது இடத்தை பெற்றார்.

மாநில அளவில் சாதனை படைத்த மாணவியை கல்லூரி செயலர் பிரான்சின் நேவிஸ், முதல்வர் அருள்மேரி தங்கம், ஐ.சி.எம். கல்விக்குழும தலைவி மேரிஜோஸ்பா மற்றும் அருட்சகோதரிகள், ஆசிரியர்கள் பாராட்டினர்.

SCROLL FOR NEXT