பிற விளையாட்டு

ஸ்டட்கார்டு ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற்றம்

இகா ஸ்வியாடெக், ஜெர்மனியின் லாரா சிக்மெண்ட் உடன் மோதினார்.

முனிச்,

ஸ்டட்கார்டு ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், ஜெர்மனியின் லாரா சிக்மெண்ட் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய இகா ஸ்வியாடெக் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.