லக்னோ,
சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் தன்வி ஷர்மா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்று வரும் இத்தொடரில் இன்று நடைபெற்ற அரையிறுதியில் தன்வி ஷர்மா, உன்னதி ஹூடாவை எதிர்கொண்டார். ஆட்டத்தின் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய உன்னதி ஹூடா, முதல் செட்டை 21-11 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
இதையடுத்து கம்பேக் கொடுத்த தன்வி ஷர்மா, அடுத்த இரு செட்களிலும் அதிரடியாக விளையாடினார். இதன் மூலம் இரண்டாவது செட்டை 21-10 என்றும், மூன்றாவது செட்டை 21-13 என்றும் கைப்பற்றி வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள தன்வி ஷர்மா, நாளை நடைபெறவுள்ள ஆட்டத்தில் தாய்லாந்தின் சுபனிதாவை எதிர்கொள்கிறார்.