பிற விளையாட்டு

சையத் மோடி பேட்மிண்டன்: பிரான்ஸ் வீரர் அர்னாடு சாம்பியன்

பெண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளின் இறுதிப்போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.

லக்னோ,

சையத் மோடி பேட்மிண்டன் தொடர் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரான்ஸ் வீரர் அர்னாடு மெர்கில் சாம்பியன் பட்டம் வென்றார்.

அர்னாடு மெர்கில்

சையத் மோடி பேட்மிண்டன் தொடர் உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில், பிரான்ஸ் வீரர் அர்னாடு மெர்கில் இந்தோனேசியாவின் ரிச்சர்டோவை எதிர்கொண்டார்.

இதில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய அர்னாடு மெர்கில் 21-15, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றினார்.

இந்திய வீரர்கள்

இதற்கிடையே, பெண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளின் இறுதிப்போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.

SCROLL FOR NEXT