லக்னோ,
சையத் மோடி பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் திரீஷா - காயத்ரி ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
சையத் மோடி பேட்மிண்டன் தொடர் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில் சகநாட்டை சேர்ந்த ராஷ்மி - அம்ருதா ஜோடியை திரீஷா - காயத்ரி இணை எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய திரிஷா - காயத்ரி ஜோடி, முதல் செட்டை 21-8 என கைப்பற்றியது. தொடர்ந்து 2-வது செட்டையும் 21-7 என கைப்பற்றியது.
இதன் மூலம் முதல் சுற்றில் எளிதில் வெற்றி பெற்ற திரீஷா - காயத்ரி ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேற்றியுள்ளது.