சென்னை,
தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானின் தைபேயில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, சக நாட்டு வீராங்கனையான தேவிகா சிஹாக் உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய உன்னதி ஹூடா 23-21, 21-16 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் தன்வி ஷர்மா, தாய்லாந்தின் சுபனிதா கடேதோங்கை வீழ்த்தி 21-15, 18-21, 21-14 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.