பிற விளையாட்டு

100 மீட்டரில் புதிய வரலாறு... ஒரே நாளில் இருமுறை தேசிய சாதனையை தகர்த்த தமிழக வீரர்!

21-வது தேசிய யூத் தடகள சாம்பியன்ஷிப் 2026 போட்டி லூதியானாவில் நடைபெற்றது.

லூதியானா,

21-வது தேசிய யூத் தடகள சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் தடகள வீரர் நீல் சாம்ராஜ், 100 மீட்டர் ஓட்டத்தில் புதிய வரலாறு படைத்துள்ளார்.

ஒரே நாளில் இருமுறை தேசிய சாதனை

21-வது தேசிய யூத் தடகள சாம்பியன்ஷிப் 2026 போட்டி லூதியானாவில் நடைபெற்றது. இதில், ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்ற நீல் சாம்ராஜ், ஒரே நாளில் இருமுறை இந்திய யு18 தேசிய சாதனையை முறியடித்து அசத்தினார்.

அரையிறுதி: அரையிறுதிப் போட்டியில் 100 மீட்டர் தூரத்தை 10.53 வினாடிகளில் கடந்து புதிய தேசிய சாதனை படைத்தார்.

இறுதிப்போட்டி: தொடர்ந்து, நடைபெற்ற இறுதிப்போட்டியில் 10.46 வினாடிகளில் இலக்கை எட்டி சாதனை படைத்தார்.

அதிவேக யூத் ஓட்டப்பந்தய வீரர்

10.46 வினாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்ததன் மூலம், 100 மீட்டர் பிரிவில் இந்தியாவின் அதிவேக யூத் ஓட்டப்பந்தய வீரர் என்ற பெருமையை நீல் சாம்ராஜ் பெற்றுள்ளார்.

SCROLL FOR NEXT