பிற விளையாட்டு

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர்கள் வெற்றி

ஸ்ரீகாந்த், லோஹ் கியானை (சிங்கப்பூர்) வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

பாங்காக்,

தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த் 21-14, 21-15 என்ற நேர்செட்டில் லோஹ் கியானை (சிங்கப்பூர்) வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் லக்ஷயா சென் 21-16, 21-17 என்ற நேர் செட்டில் சிங்கப்பூரின் ஜியா ஹெங் ஜாசன் டெக்கை தோற்கடித்தார்.

வெற்றிக்களிப்பில் தேவிகா சிஹாக்.