பிற விளையாட்டு

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து தோல்வி

இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் அகானே யமாகுச்சி உடன் மோதினார்.

சென்னை,

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பாங்காங்கில் நடந்து வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் அகானே யமாகுச்சி உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய யமாகுச்சி 19-21, 21-18, 21-15 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் பிவி சிந்து தொடரில் இருந்து வெளியேறினார்.