பிற விளையாட்டு

தாமஸ் கோப்பை பேட்மிண்டன்: இந்திய அணி தோல்வி

கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சீனாவுடன் மோதியது.

ஹோர்சென்ஸ்,

ஆண்களுக்கான தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டி டென்மார்க்கில் உள்ள ஹோர்சென்ஸ் நக ரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் பிரிவில் பங்கேற்றுள்ள 16 அணி கள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதின. இதில் 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி ஏற்கனவே காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் நேற்று நடந்த 3-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சீனாவுடன் மோதியது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கணக்கில் சீனாவிடம் போராடி வீழ்ந்தது.