பிற விளையாட்டு

துளிகள்

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி விசாரணை நடத்தி கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ரூ.15 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

* சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து போட்டியின் நாக்-அவுட் சுற்று ஆட்டம் ஒன்றில் யுவென்டஸ் அணி, அட்லெடிகோ மாட்ரிட் அணியை தோற்கடித்தது. இந்த ஆட்டத்தின் போது ஹாட்ரிக் கோல் அடித்த யுவென்டஸ் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ எதிரணியினரை நோக்கி ஆபாசமாக சைகை காட்டி சர்ச்சையில் சிக்கினார். இது குறித்து ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி விசாரணை நடத்தி கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ரூ.15 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

* 5-வது தெற்காசிய பெண்கள் கால்பந்து போட்டி நேபாளத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, போட்டியை நடத்தும் நேபாளத்தை எதிர்கொள்கிறது. தொடர்ந்து 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள இந்திய அணி மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.