பிற விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் மல்யுத்த போட்டி; இந்தியாவின் சோனம் மாலிக் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் சோனம் மாலிக் தோல்வி அடைந்த போதிலும் மற்றொரு வாய்ப்பு உள்ளது.

டோக்கியோ,

ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் 12வது நாளான இன்று மகளிர் மல்யுத்த போட்டியில் (62 கிலோ எடை பிரிவு) இந்தியாவின் சோனம் மாலிக் மற்றும் மங்கோலியா நாட்டின் போலர்துயா குரெல்கூ ஆகியோர் விளையாடினர்.

இந்த போட்டியில் சோனம் தோல்வி அடைந்துள்ளார். எனினும் அவருக்கு போட்டியில் தொடர்ந்து விளையாட மற்றொரு வாய்ப்பு உள்ளது.