டோக்கியோ,
32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் 8வது நாளான இன்று 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் இந்திய வீரர் அவினாஷ் முகுந்த் சேபிள் தோல்வி அடைந்துள்ளார்.
அவர் இந்த போட்டியில் 8:18.12 என்ற நேரகணக்கில் பந்தய தொலைவை கடந்து 7வது இடம் பெற்றுள்ளார். இந்த போட்டியில் கென்யாவை சேர்ந்த ஆபிரகாம் கிபிவோட் முதல் இடமும், எத்தியோப்பியாவின் வேல் கெட்னெட் 2வது இடமும் பெற்றுள்ளனர்.
இவர்களுடன் இத்தாலியை சேர்ந்த அகமது அப்துல்வாகித் 3வது இடம் பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர். வருகிற ஆகஸ்டு 2ந்தேதி ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் இறுதி போட்டி நடைபெற உள்ளது.