பிற விளையாட்டு

டோட்டல் செஸ் தொடர்: கார்ல்சென் தோல்வி

முதல் 6 ஆட்டங்களில் 5 டிரா, ஒரு தோல்வி கண்டுள்ளார்.

புடாபெஸ்ட்,

டோட்டல் செஸ் உலக சாம்பியன்ஷிப் டூர் பைலட் தொடர் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. இந்த தொடர் கிளாசிக், ரேபிட், பிளிட்ஸ் ஆகிய 3 வகையான போட்டிகளை உள்ளடக்கியதாகும். இதில் பங்கேற்றுள்ள 24 வீரர், வீராங்கனைகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். 'பாஸ்ட் கிளாசிக்' முறையில் நடைபெறும் லீக் சுற்றில் ஒவ்வொருவரும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா இரு முறை மோத வேண்டும்.

கார்ல்சென்

இதில் 3-வது நாளில் நடந்த ஒரு ஆட்டத்தில் 'சி' பிரிவில் இடம் பெற்றுள்ள 5 முறை உலக சாம்பியனும், 'நம்பர் ஒன்' வீரருமான 35 வயது மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) அர்மேனியாவின் ஹைக் மார்டிரோசனை சந்தித்தார். அவருக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் 41-வது காய் நகர்த்தலில் அதிர்ச்சி தோல்வி கண்ட கார்ல்சென், 2-வது ஆட்டத்தில் டிரா கண்டார். இந்த போட்டி தொடரில் கார்ல்சென் இன்னும் வெற்றி கணக்கை தொடங்கவில்லை. முதல் 6 ஆட்டங்களில் 5 டிரா, ஒரு தோல்வி கண்டுள்ளார்.

அர்ஜூன் எரிகைசி

இதனால் அவர் 15.8 ரேட்டிங் புள்ளிகளை இழந்துள்ளார். கடந்த 15 ஆண்டு களாக தரவரிசையில் 'நம்பர் ஒன்' வீரராக வலம் வரும் கார்ல்சென் மேலும் சறுக்கலை சந்தித்தால் 'நம்பர் ஒன்' இடத்தை இழக்க நேரிடும். அவரை நெருங்கி வரும் அமெரிக்க வீரர் பாபியானோ கருணா 7.2 புள்ளிகளே பின்தங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

'பி' பிரிவில் அங்கம் வகிக்கும் அமெரிக்க வீரர் பாபியானோ கருணா, ஜெர்மனியின் வின்சென்ட் கீமருடன் பலப்பரீட்சை நடத்தினார். அவருக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் வெற்றி பெற்ற பாபியனோ கருணா, 2-வது ஆட்டத்தில் டிரா செய்தார். இதேபிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, உக்ரைன் வீரர் விலாடிஸ்லாவ் அர்டி மிவ்க்கு எதிரான இரண்டு ஆட்டங்களிலும் டிரா கண்டார்.

'டி' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி. அமெரிக்காவின் வெஸ்லி சோவை சந்தித்தார். அவருக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் வெற்றி கண்ட அர்ஜூன் எரிகைசி 2-வது ஆட்டத்தில் டிரா செய்தார்.

இதே பிரிவில் உள்ள இந்திய வீராங்கனை ஆர்.வைஷாலி, கஜகஸ்தான் வீராங்கனை பிபிசாராவுக்கு எதிரான முதலா வது ஆட்டத்தில் தோற்றார். அடுத்த ஆட்டத்தில் பதிலடி கொடுத்து நடப்பு தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தார்.

SCROLL FOR NEXT