பிற விளையாட்டு

செக் ஓபன் ஸ்குவாஷ் : சாம்பியன் பட்டம் வென்று வேலவன் செந்தில்குமார் சாதனை

சமீபத்தில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வேலவன் செந்தில்குமார் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தார்.

பர்னோ,

செக் ஓபன் ஸ்குவாஷ் தொடரில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

விறுவிறுப்பான இறுதிப்போட்டி

செக் குடியரசின் பர்னோ நகரில் நடைபெற்ற செக் ஓபன் 2026 ஸ்குவாஷ் தொடரின் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், 4-ம் நிலை வீரரான வேலவன் செந்தில்குமார், கிரெக் லோபனை எதிர்கொண்டார்.

இதில் வேலவன் 13-11 என முதல் செட்டை கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய வேலவன், 2-வது செட்டை 11-5 என வென்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். இதற்கு பதிலடி கொடுத்த லோபன் 3-வது செட்டை 11-8 எனக் கைப்பற்றினார்.

ஆனால், 4-வது செட்டில் மீண்டும் ஆதிக்கம் செலுத்திய வேலவன் 11-7 என வெற்றி பெற்றார். இதன் மூலம் 13-11, 11-5, 8-11, 11-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.

12-வது பிஎஸ்ஏ பட்டம்

இந்த வெற்றியின் மூலம் வேலவன் செந்தில்குமார் தனது சர்வதேச பிஎஸ்ஏ ஸ்குவாஷ் சுற்றுப் போட்டிகளில் 12-வது பட்டத்தைக் கைப்பற்றினார்.

ஆசிய விளையாட்டு

சமீபத்தில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வேலவன் செந்தில்குமார் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தார். ஜோஷ்னா சின்னப்பாவுடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவிலும், இந்திய ஆண்கள் அணியின் சார்பிலும் அவர் வெண்கலப் பதக்கம் பெற்றார்.

SCROLL FOR NEXT