லண்டன்,
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 2வது சுற்று போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, ஸ்பெயினின் சாரா சாரிப்ஸ் உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பெகுலா 7-6 (8-6), 6-1 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப், அர்ஜென்டினாவின் சோலானா சியர்ராவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.