லண்டன்,
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 3வது சுற்று போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, ஸ்பெயினின் ஜெசிகா பவுசஸ் உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஜெசிகா பெகுலா 6-1, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.