லண்டன்,
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் மூன்றாவது சுற்று போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஜெர்மனியின் ஜேன் லென்னார்டு ஸ்ட்ரப் உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஜேன் லென்னார்டு 7-6 (7-4), 7-6 (7-5), 7-5 என்ற செட் கணக்கில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
நான்காவது சுற்றில் ஜேன் லென்னார்டு போலந்தின் ஹியூபர்ட் ஹர்காக்ஸ் உடன் மோதுகிறார்.