பிற விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ்: யூகி பாம்ப்ரி ஜோடி தோல்வி

யூகி பாம்ப்ரி-மைக்கேல் வீனஸ் ஜோடி, நெதர்லாந்தின் ஜீன் ஜூலியன் ரோஜர்-அமெரிக்காவின் தியோடர் வினிகர் ஜோடி உடன் மோதியது.

லண்டன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி, நெதர்லாந்தின் ஜீன் ஜூலியன் ரோஜர்-அமெரிக்காவின் தியோடர் வினிகர் ஜோடி உடன் மோதியது.

இந்த ஆட்டத்தில் யூகி பாம்ப்ரி ஜோடி 3-6, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது. இதன்மூலம் யூகி பாம்ப்ரி ஜோடி வெளியேறியது.