பதும்தானி,
12-வது பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து (20 வயதுக்கு உட்பட்டோர்) போட்டி தாய்லாந்தில் நடந்து வருகிறது. போட்டியில் பங்கேற்றுள்ள 12 அணிகள் 3 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதி வருகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் 3-வது இடம் பெறும் இரண்டு சிறந்த அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.
இதில் 'சி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா இன்று நடைபெ றும் தனது 2-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் (பிற்பகல் 2.30 மணி) மோதுகிறது. தங்களது முதலாவது ஆட் டங்களில் இந்திய அணி 6 முறை சாம்பியனான ஜப்பானிடம் (0-6) தோற்று இருந்தது. ஆஸ்திரேலிய அணி, சீன தைபேவை (5-0) தோற்கடித்து இருந்தது. அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும்.