பதும்தானி,
12-வது பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து (20 வயதுக்கு உட்பட்டோர்) போட்டி தாய்லாந் தில் நடந்து வருகிறது. இதில் 'சி' பிரிவில் அங்கம் வகித்த இந்திய அணி, தனது 3-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் சீன தைபேவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் சீன தைபேயை வீழ்த்தியது.
மற்ற பிரிவு ஆட்டங்களின் முடிவு சாதகமாக அமையாததால் இந்திய அணி காலிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந் தது.