பிற விளையாட்டு

பெண்கள் உலகக் கோப்பை ஆக்கி தகுதி சுற்று: இந்திய அணி தோல்வி

இறுதி ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின.

ஐதராபாத்,

16-வது பெண்கள் உலகக் கோப்பை ஆக்கி போட்டி பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் ஆகஸ்டு 14-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தகுதி சுற்று ஐதராபாத்தில் நடந்தது. 8 அணிகள் பங் கேற்ற இந்த போட்டியில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை சொந்த மாக்கியது.

இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து. 2-வது இடம் பிடித்த இந்தியா, 3-வது இடம் பெற்ற ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் நேர டியாக உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன.