பிற விளையாட்டு

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: அறிமுகப் போட்டியிலேயே இந்திய வீரர் சாதனை

அறிமுகத்திலேயே மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளார்

புதுடெல்லி,

30-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் உள்ள இந்திராகாந்தி ஸ்டே டியத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 23-ந்தேதி வரை நடக்கிறது. கவுரவமிக்க இந்த போட்டி இந்தியாவில் நடப்பது 2009-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் அனைவரும் ஒருசேர கால்பதிப்பதால் களத்தில் அனல் பறக்கப்போகிறது.

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் சுற்றில் இந்தியாவின் இளம் வீரர் ஆயுஷ் ஷெட்டி,நம்பர் 1 வீரரும், நடப்பு சாம்பியனான சீனாவின் ஷி யூகியை வீழ்த்தி அசத்தினார்.

பரபரப்பான ஆட்டத்தில் 21-14, 13-21, 21-19 என்ற கணக்கில் வெற்றி பெற்ற ஆயுஷ் ஷெட்டி, தனது உலக சாம்பியன்ஷிப் அறிமுகத்திலேயே மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளார்