புதுடெல்லி,
30-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வந்தது. கடைசி நாளான நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' வீராங்கனையும், ஒலிம்பிக் சாம்பியனுமான அன்சே யங் (தென்கொரியா), நடப்பு சாம்பியனான அகானே யமாகுச்சியை (ஜப்பான்) எதிர்காண்டார். இதில் அன்சே யங் 21-17, 21-14 என்ற நேர் செட்டில் வெற்றி கண்டு சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார்.
ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் அலெக்ஸ் லேனியர். ஜப்பானின் கோடாய் நரோகாவுடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய லேனியர் 21-11, 21-11 என்ற நேர் செட்டில் நரோகாவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.