பிற விளையாட்டு

உலக செஸ் சாம்பியன்ஷிப்: 4-வது சுற்று ஆட்டமும் ‘டிரா’

ஒரே மாதிரியான நகர்வுகளை 3 முறை திரும்ப திரும்ப செய்ததன் அடிப்படையில் இந்த ஆட்டம் டிரா ஆனது.

ஜெனிவா,

நடப்பு சாம்பியன் குகேஷ் (இந்தியா) ஜவோகிர் சிந்தாரோவ் (உஸ்பெகிஸ்தான்) இடையிலான உலக செஸ் சாம்பியன் ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடந்து வருகிறது. 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் முதல் 3 சுற்று ஆட்டங்கள் 'டிரா'வில் முடிந்திருந்தது.

இந்த நிலையில் 4-வது சுற்று போட்டி நேற்று இரவு நடந்தது. இதில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய குகேஷ், 34-வது நகர்த்தலில் டிரா செய்தார். ஒரே மாதிரியான நகர்வுகளை 3 முறை திரும்ப திரும்ப செய்ததன் அடிப்படையில் இந்த ஆட்டம் டிரா ஆனது. இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 5-வது சுற்றில் தமிழக கிராண்ட்மாஸ்டர் குகேஷ் கருப்பு நிற காய்களுடன் விளையாடுவார்.

SCROLL FOR NEXT