பிற விளையாட்டு

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: சுவிட்சர்லாந்தில் இன்று தொடக்கம்

இரு குறைந்த வயது வீரர்கள் மோதும் உலக செஸ் சாம்பியன் ஷிப்பாக இது பார்க்கப்படுகிறது.

'பிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (டிசம்பர்) 12-ந்தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியாவின் குகேசும். கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி பெற்ற ஜவோகிர் சிந்தாரோவும் (உஸ்பெகிஸ்தான்) கோதாவில்

குதிக்கிறார்கள். இருவருக்கும் தற்போது வயது 20. இரு குறைந்த வயது வீரர்கள் மோதும் உலக செஸ் சாம்பியன் ஷிப்பாக இது பார்க்கப்படுகிறது.

செஸ்

14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டி கிளாசிக்கல் முறையில் (நீண்ட நேரம் அடிப்படையில்) நடைபெறுகிறது. வெற்றிக்கு ஒரு புள்ளியும், டிராவுக்கு அரை புள்ளியும் வழங்கப்படும். யார் முதலில் 7.5 புள்ளியை எட்டுகிறார் களோ அவர்கள் உலக சாம்பியன் பட்டத்தை வெல்வார்கள். 14 சுற்று முடி வில் சமநிலை நீடித்தால், டைபிரேக்கர் கடைபிடிக்கப்படும்.

ஒவ்வொரு சுற்றுக்கும் முதல் 40 நகர்த்தலுக்கு 120 நிமிடங்களும், எஞ்சிய ஆட்டத்துக்கு 30 நிமிடங்களும் ஒதுக்கப்படும். இது தவிர 41-வது நகர்த்த லில் இருந்து ஒவ்வொரு நகர்த்தலுக்கும் கூடுதலாக 30 வினாடி வழங்கப் படும். 41-வது நகர்த்தலுக்கு முன்பாக டிராவில் முடிக்க அனுமதிக்கப்படாது. போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.23.75 கோடியாகும். டைபிரேக்கர் வரை வந்து முடிவு கிடைத்தால் சாம்பியன் பட்டத்தை வெல்லும் வீரருக்கு ரூ.12 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் வீரருக்கு ரூ.11.75 கோடியும் அளிக்கப்படும்.

SCROLL FOR NEXT