பிற விளையாட்டு

உலகக் கோப்பை கால்பந்து: பிரான்ஸ் அணி அறிவிப்பு

26 பேர் கொண்ட பிரான்ஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரீஸ்,

23-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் அடுத்த மாதம் (ஜூன்) 11-ந் தேதி முதல் ஜூலை 19-ந் தேதி வரை நடக்கிறது. 48 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் 2 முறை சாம்பியனான பிரான்ஸ் அணி 'ஐ' பிரிவில் இடம் பிடித்துள்ளது. செனகல், ஈராக், நார்வே ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிக ளாகும். கடந்த (2022) முறை அர்ஜென்டினாவிடம் தோற்று 2-வது இடம் பிடித்த பிரான்ஸ் அணி 3-வது முறையாக கோப்பையை கைப்பற்ற குறி வைக்கிறது.

இந்த நிலையில், உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான 26 பேர் கொண்ட பிரான்ஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் கால்பந்து அணி:-

கோல்கீப்பர்கள்:

மைக் மைக்னன், பிரிக் சம்பா, ராபின் ரைசர்,

பின்களம்:

லூகாஸ் டிக்னே, மலோ கஸ்டோ, லூகாஸ் ஹெர்னாண்டஸ், தியோ ஹெர் னாண்டஸ், இப்ராகிம் கோனட், ஜூல்ஸ் குண்டே, மேக்சென்ஸ் லாக்ரோ யிஸ், வில்லியம் சலிபா, டயோட் உபமேகானோ.

நடுகளம்:

கோலே கண்டே, மனு கோன், அட்ரியன் ராபியோட், அரெலியன் டெசுமேனி, வாரன் ஜெய்ரி எமெரி.

முன்களம்:

மாக்னஸ் அகிலோச்சி, பிராட்லி பார்கோலா, ரையான் செர்கி, உஸ்மான் டெம்பிலே, டிசைர் டோவே, ஜீன் பிலிப் மாடெட்டா, கைலியன் எம்பாப்பே(கேப்டன்), மைக்கேல் ஒலிசி, மார்கஸ் துரம்.