மாட்ரிட்,
48 அணிகள் பங்கேற்கும் 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த மாதம் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள நாடுகளில் ஒன்றாக கணிக்கப்பட்டுள்ள ஸ்பெயின் அணியை அதன் தலைமை பயிற்சியாளர் லூயிஸ் டி லா புனெட் அறிவித்தார்.
ஸ்பெயின் வீரர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் நாட்டில் உள்ள புகழ் பெற்ற ரியல் மாட்ரிட், பார்சிலோனா ஆகிய கிளப்புகளுக்காக விளையாடுகி றார்கள். ஆனால் ஆச்சரியம் அளிக்கும் வகையில் ரியல்மாட்ரிட் வீரர்களில் ஒருவர் கூட உலகக் கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. டீன் ஹஜ்சென், அல்வரோ கேரிராஸ், பிரான் கார்சியா ஆகியோர் உறுதியாக இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்களை சேர்க் காதது ரசிகர்களை கடும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ரியல் மாட்ரிட் வீரர்கள் உலகக் கோப்பைக்கான ஸ்பெயின் அணியில் இடம் பெறாதது இதுவே முதல்முறையாகும்.