பிற விளையாட்டு

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: வெண்கலப்பதக்கம் வென்ற சோனம் ஜோடி

இளவேனில்- பார்த் கூட்டணி 378.8 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பெற்று ஏமாற்றம் அளித்தது.

ஹாங்சோவ்,

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 10 மீட்டர் ஏர்ரைபிள் கலப்பு அணிகள் பிரிவின் இறுதி சுற்றில் இந்தியா வின் சோனம் உத்தம் மாஸ்கர்-ஹிமான்ஷூ தில்லான் இணை 441.2 புள்ளிகள் குவித்து வெண்கலப்பதக்கம் பெற்றது.

சீனாவை சேர்ந்த ஜோடிகள் தங்கம், வெள்ளிப்பதக்கத்தை வென்றனர். இந்தியாவின் இளவேனில்- பார்த் கூட்டணி 378.8 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பெற்று ஏமாற் றம் அளித்தது.