பிற விளையாட்டு

உலக ஜூனியர் செஸ்: தமிழக வீராங்கனை முதலிடம்

சவிதா, நிவேதிதா ஆகிய இருவரும் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவர்.

சென்னை,

பிடே உலக ஜூனியர் (20 வயதுக்கு உட்பட்டோர்) செஸ் சாம்பியன்ஷிப் போட்டி வெனிசுலா நாட்டில் நடந்தது. இதன் பெண்கள் பிரிவில் 11 சுற்றுகள் முடிவில் தோல்வியே சந்திக்காத இந்திய வீராங்கனையான தமிழகத்தை சேர்ந்த சவிதா ஸ்ரீ 8 வெற்றி, 3 டிராவுடன் 9.5 புள்ளிகள் குவித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். சீன வீராங்கனை சென் யினிங் 8.5 புள்ளிகளுடன் 2-வது இடமும், மற்றொரு தமிழக வீராங்கனை நிவேதிதா 7.5 புள்ளிகளுடன் 3-வது இடமும் பெற்றனர். சவிதா, நிவேதிதா ஆகிய இருவரும் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவர்.

இதன் ஓபன் பிரிவில் இந்திய வீரர்கள் ஈதன் வாஸ் (9 புள்ளி) முதலிடமும். பிரனீத் (8.5 புள்ளி) 3-வது இடம் பிடித்தனர். அஜர்பைஜான் வீரர் ககன் அகமத் (8.5 புள்ளி) 2-வது இடத்தை தனதாக்கினார்.

முதல்-அமைச்சர் விஜய்

உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீராங்கனைகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், 'வெனிசுலா நாட்டில் நடைபெற்ற பிடே உலக ஜூனியர் (20 வயதுக்குட்பட்டோர்) மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், பல் வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி, உலகச் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனை சவிதா ஸ்ரீக்கும். இப்போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனை நிவேதிதாவுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்களது அபாரமான அறிவாற்றல், நுணுக்கமான ஆட்டத்திறன், விடாமுயற்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றால் உலக அரங்கில் சாதனை படைத்துள்ள அவர்களது வெற்றி, இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களுக்கு மிகப்பெரிய ஊக் கமாக அமைந்துள்ளது.செஸ் வீராங்கனைகள் சவிதா ஸ்ரீ, நிவேதிதா ஆகியோர் வருங்காலங்களிலும் சர்வதேச சாதனைகள் பல படைத்து, உலக செஸ் அரங்கில் தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை தேடித்தர எனது வாழ்த்துகள்' என்று தெரிவித் துள்ளார்.

SCROLL FOR NEXT