ஒன்டாரியா,
உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி கனடாவில் உள்ள ஒன்டாரியாவில் நடைபெற் றது.
இதில் பங்கேற்ற இந்திய வீராங்கனை அனகத் சிங் சாம்பியன் பட்டம் பெற்றார். உலகதர வுரிசையில் 20-வது இடத்தில் உள்ளவரும், இந்த போட்டியின் முதல் நிலையில் உள்ளவருமான அவர் 11-3, 11-7, 11-9 என்ற கணக்கில் எகிப்தைச் சேர்ந்த ருகையா சலீமை தோற்கடித்தார்.
இதன் மூலம் உலக ஜூனியர் ஸ்குவாஷ் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றை அனகத் சிங் படைத்தார்.