பிற விளையாட்டு

உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி: இந்திய அணி வெண்கலம் வென்றது

ஏற்கனவே காலிறுதியில் அமெரிக்காவிடம் தோற்று நடையை கட்டியிருந்தது.

ஒன்டாரியோ,

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவின் ஒன்டாரியோ நகரில் நடந்தது. இதில் ஆண்கள் அணிகள் பிரிவின் அரையிறுதியில் இந்திய அணி 0-2 என்ற கணக்கில் அமெரிக்காவிடம் தோற்று வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி கண்டது.

இந்திய வீரர் குர்வீர் சிங், ஆர்யாவீர் தேவன் தங்கள் ஆட்டங்களில் தோல்வியை தழுவினர். இந்திய பெண்கள் அணி ஏற்கனவே காலிறுதியில் அமெரிக்காவிடம் தோற்று நடையை கட்டியிருந்தது.

கடந்த ஆண்டும் வெண்கலப்பதக்கம் வென்று இருந்த இந்திய ஆண்கள் அணி முதல்முறை யாக தொடர்ந்து 2-வது முறையாக வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றி இருக்கிறது.

SCROLL FOR NEXT