image courtesy: twitter/@issf_official 
பிற விளையாட்டு

உலக துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் சம்ரத் ராணா தங்கம் வென்று அசத்தல்

மற்றொரு இந்திய வீரரான வருண் தோமர் வெண்கலப்பதக்கம் வென்றார்.

கெய்ரோ,

உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் சம்ரத் ராணா அசத்தினார். அவர் 8 பேர் இடையிலான இறுதி சுற்றில் மொத்தம் 243.7 புள்ளிகள் எடுத்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். சீனாவின் ஹூ காய் 243.3 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், இந்திய வீரர் வருண் தோமர் 221.7 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

இதுவரை இந்தியா 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கம் வென்று பதக்கப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. சீனா 6 தங்கம் உள்பட 12 பதக்கத்துடன் முதலிடம் வகிக்கிறது.