தோகா,
உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக் கான 25 மீட்டர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இஷா சிங், மனு பாக்கர், திவ்யா சுபராஜூ ஆகியோர் அடங்கிய இந்திய அணி மொத்தம் 1,761 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. தென்கொரியா வெள்ளியும் (1,748 புள்ளி), வியட்நாம் வெண்கலமும் (1,745 புள்ளி) பெற்றது.
இதன் தனிநபர் தகுதி சுற்றில் இஷா சிங், மனு பாக்கர் ஆகியோர் முதல் 8 இடங்களுக்குள் வந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தனர். இந்த நிலையில் 8 பேர் இடையிலான இறுதி சுற்று நேற்று அரங்கேறியது. இதில் மனு பாக்கர் 27 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பெற்று மயிரிழையில் பதக்கத்தை கோட்டை விட்டார். 'நம்பர் ஒன்' வீராங்கனையான இஷா சிங் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டார்.