லண்டன்,
உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இங்கி லாந்து தலைநகர் லண்டனில் இன்று தொடங்கி மே 10-ந் தேதி வரை நடக் கிறது. இதன் நூற்றாண்டு கொண்டாட்டத் தின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்த போட்டியில் இதுவரை இல்லாத எண்ணிக்கையாக ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 64 அணிகள் பங்கேற்கின்றன. அவை 16 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய ஆண் கள் அணி 7-வது பிரிவில் இடம் பிடித்துள்ளது. சுலோவக்கியா, துனிசியா, கவுதமாலா ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.
இந்திய பெண்கள் அணி 6-வது பிரிவில் உக்ரைன், உகாண்டா, ருவாண்டா ஆகிய அணிகளுடன் இணைந்து இடம் பிடித்துள்ளது.
ஒவ் வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக பிரதான சுற்றுக்கு முன்னேறும்.