பிற விளையாட்டு

உலக டேபிள் டென்னிஸ்: இந்தியா வெற்றி

இந்திய அணி 2-வது வெற்றியை பெற்றது.

லண்டன்,

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்ட னில் நடந்து வருகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 64 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 16 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 6-வது பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய பெண்கள் அணி நேற்று பலம் வாய்ந்த உக்ரைனை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.

இதில் இந்திய நட்சத்திர வீராங்கனை மணிகா பத்ரா 11-9, 7-11, 11-6, 11-5 என்ற செட் கணக்கில் தேத்யனா பிளென்கோவை வென்றதும் அடங்கும்.