சென்னை,
உலக டேபிள் டென்னிஸ் ஸ்டார் கன்டென்டர் சென்னையில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சத்யன் ருமேனியாவின் எட்வர்டு இனேசியை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் 9-11, 11-3, 10-12, 11-7, 11-5 என்ற செட் கணக்கில் சத்யன் வெற்றி பெற்றார். இதனால் காலிறுதிக்கு முன்னேறினார்.