புதுடெல்லி,
உலக டேபிள் டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டேபிள் டென்னிஸ் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. இதன்படி ஆண்கள் இரட்டையர் தரவரி சையில் இந்தியாவின் மானவ் தாக்கர்-மனுஷ் ஷா ஜோடி (3,390 புள்ளி) ஒரு இடம் முன்னேற்றம் கண்டு 2-வது இடத்தை பிடித்துள்ளது.
இதேபோல் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தியா சிதாலே-யாஷஸ்வினி இணை ஒரு இடம் ஏற்றம் கண்டு 10-வது இடத்தை தனதாக்கி இருக்கிறது. கலப்பு இரட்டையர் பிரி வில் இந்தியாவின் தியா சிதாலே-மனுஷ் ஷா கூட்டணி ஒரு இடம் உயர்ந்து 5-வது இடத்தை சொந்தமாக்கி இருக்கிறது.