பிற விளையாட்டு

உலக மல்யுத்த போட்டி: இந்திய வீரர் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தல்

ஜார்ஜியாவின் கோபா கருமிட் சேவிடம் மயிரிழையில் தோற்று வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டார்.

லாஸ்வேகாஸ்.

23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக் கான கிரிக்கோ ரோமன் 55 கிலோ எடைப்பிரிவின் இறுதி சுற்றில் இந்திய வீரர் விஸ்வஜித் மோர் 12-13 என்ற புள்ளி கணக்கில் ஜார்ஜியாவின் கோபா கருமிட் சேவிடம் மயிரிழையில் தோற்று வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டார். இதன் மூலம் அவர் 23 வயதுக்குட்பட்ட உலக மல்யுத்தத்தில் கிரிக்கோ ரோமன் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சிறப்பை பெற்றார். மற்ற இந்திய வீரர்களான சேத்தன் (63 கிலோ) கால்இறுதிக்கு முந்தைய சுற்றிலும், கரண் கம்போஜ் (87 கிலோ) தகுதி சுற்றிலும் தோற்று வெளியேறினர்.

பெண்களுக்கான 59 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீராங் கனை கோமல் தொழில்நுட்ப அடிப்படையில் உக்ரைனில் அலினாவிடம் தோற்றார். அடுத்து அவர் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் களம் காணுகிறார். இதேபோல் மற்றொரு இந்திய வீராங்கனை தீக்ஷா மாலிக் (76 கிலோ) வெண்கப்பதக்கத்துக்கான பந்தயத்தில் இருக்கிறார். மான்சி லாதெர் (68 கிலோ) கால்இறுதியுடன் நடையை கட்டினார்.

SCROLL FOR NEXT