பிற விளையாட்டு

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை தங்கம் வென்று வரலாறு படைத்தார்

தங்கப்ப தக்கத்தை உச்சிமுகர்ந்த முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.

அஸ்தானா,

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 59 கிலோ எடைப்பிரிவின் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை மனிஷா பன்வாலா. அமெரிக்காவின் அபிகைல் நெட்டியுடன் கோதாவில் குதித்தார்.

மனிஷா

திரில்லிங்கான ஆட்டத்தின் முடிவில் மனிஷா 8-6 என்ற புள்ளி கணக்கில் நெட்டியை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம் அரியானாவைச் சேர்ந்த 29 வயது மனிஷா உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கப்ப தக்கத்தை உச்சிமுகர்ந்த முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்தார். அத்துடன் 2-வது இந்தியர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்பு 2010-ம் ஆண்டில் இந்திய வீரர் சுஷில் குமார் உலக மல்யுத் தத்தில் தங்கப்பதக்கம் வென்று இருந்தார்.

நடப்பு தொடரில் இந்திய வீராங்கைனகள் நீலம் சிரோஹி (50 கிலோ). காஜல் (76 கிலோ) ஆகியோர் இறுதிப்போட்டி யில் தோற்று வெள்ளிப்பதக்கம் பெற்றனர். ஆனால் மனிஷா இறுதிதடையை வெற்றிகரமாக கடந்து பிரமாதப்படுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT