பிற விளையாட்டு

உலக மல்யுத்தம்: இந்திய வீராங்கனை கோமல் வெண்கலம் வென்றார்

கஜகஸ்தானின் விக்டோரியா குசைனோவாவை தோற்கடித்து வெண்கலப்பதக்கத்தை தனதாக்கினார்.

லாஸ்வேகாஸ்,

23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக் கான பிரீஸ்டைல் 72 கிலோ எடைப்பிரிவில் அம்ருதா பூஜாரி (இந்தியா) கால் இறுதியில் கஜகஸ்தானின் சபிர்ஜனோவாவையும், அரைஇறுதியில் சீனாவின் வென்ஜின் கியூவையும் அடுத்தடுத்து வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி குறைந்தபட்சம் வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்தார்.

59 கிலோ எடைப்பிரி வில் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய வீராங்கனை கோமல் 7-2 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தானின் விக்டோரியா குசைனோவாவை தோற்கடித்து வெண்கலப்பதக்கத்தை தனதாக்கினார்.

SCROLL FOR NEXT