பிற விளையாட்டு

வுஷூ இறுதிப்போட்டி: தங்கத்தை நழுவவிட்ட ரோஷிபினா தேவி... இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்

ரோஷிபினா தேவி, சீனாவின் ஜாங் சியாவோயுவை எதிர்கொண்டார்.

நகோயா,

20-வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீராங்கனை ரோஷிபினா தேவி வுஷூவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.பெண்களுக்கான 60 கிலோ சாண்டா பிரிவு இறுதிப்போட்டியில் ரோஷிபினா தேவி, சீனாவின் ஜாங் சியாவோயுவை எதிர்கொண்டார். இதில் ரோஷிபினா தேவி 0-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதனால் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

இதன்மூலம் ரோஷிபினா தேவி தொடர்ந்து 3-வது ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்றுள்ளார்.

  • 2018 ஜகார்த்தா – வெண்கலம்

  • 2023 ஹாங்சோ – வெள்ளி

  • 2026 அய்ச்சி-நகோயா – வெள்ளி

ரோஷிபினா தேவி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வங்காளதேசத்தின் ஷிகா காதுனை வீழ்த்தினார். காலிறுதியில் மக்காவோவின் சூ மான் சினை 5-0 என்ற கணக்கில் வென்றார். அரையிறுதியில் இந்தோனேசியாவின் தனியா குசுமன்தியாஸை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இறுதியில் தங்கப் பதக்கத்தை தவறவிட்டாலும், தொடர்ச்சியாக 3 ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வுஷூ வீராங்கனை என்ற பெருமையை ரோஷிபினா தேவி பெற்றுள்ளார்.

SCROLL FOR NEXT