தாகர்,
இளையோர் ஒலிம்பிக் போட்டி ஆப்பிரிக்க நாடான செனகலில் நடந்து வரு கிறது. இதில் பேட்மிண்டனில் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்தி வீராங்கனை தன்வி பாத்ரி, ஜூனியர் உலக சாம்பியனான ஜாங் யி ஜின்னை (சீனா) சந்தித்தார்.
திரில்லிங்கான இந்த ஆட்டத் தில் தன்வி பாத்ரி 21-15, 13-21, 24-26 என்ற செட் கணக்கில் ஜான் யி ஜின் னிடம் போராடி தோற்று வெள்ளிப்பதக்கம் பெற்றார். இதன் மூலம் கர்நாடகாவை சேர்ந்த 15 வயது தன்வி பாத்ரி இளையோர் ஒலிம்பிக் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையரில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாறு படைத்தார்.
இதற்கு முன்பு இந்திய பேட்மிண்டன் வீரர்கள் எச்.எஸ்.பிரனாய் (2010), லக்ஷயா சென் (2018) ஆகியோர் ஒற்றையர் பிரிவி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளனர்.
இதே போல் நீச்சலில் இந்திய வீராங்கனை திநிதி தேசிங்கு 200 மீட்டர் பிரீஸ் டைல் இறுதி சுற்றில் 2 நிமிடம் 02.28 வினாடிகளில் 3-வதாக வந்து வெண்க லப்பதக்கத்தை தட்டிச் சென்றார். திநிதி ஏற்கனவே 100 மீட்டர் பிரீஸ்டைல் பந் தயத்திலும் வெண்கலம் வென்றிருந்தார். இதையடுத்து இளையோர் ஒலிம்பிக் தொடர் ஒன்றில் தனிநபரில் இரட்டை பதக்கத்தை ருசித்த முதல் இந்தியர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.
நீச்சலில் ஆண்களுக்கான 200 மீட்டர் பட்டர்பிளை இறுதி சுற்றில் இந்தியா வின் பெகு திர்தாங்க் 2 நிமிடம் 01.25 வினாடிகளில் இலக்கை அடைந்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.