தகார்
இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில், இந்திய நீச்சல் வீராங்கனை வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார்.
செனகல் நாட்டின் தகார் நகரில் இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், நீச்சல் பிரிவில் இந்தியாவை சேர்ந்த வீராங்கனை தினிதி தேசிங்கு பங்கேற்று வெண்கல பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இளையோர் ஒலிம்பிக்கில் நீச்சல் பிரிவில் முதன்முறையாக பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
இந்த போட்டியில், குரோஷியா நாட்டை சேர்ந்த வீராங்கனை அனா போபானோவிச் (55.89 வினாடிகள்) தங்க பதக்கமும், நியூசிலாந்தின் அலைசா லாசன் (56.13 வினாடிகள்) வெள்ளி பதக்கமும் வென்றனர்.
தினிதி இந்த சாதனையை படைப்பதற்கு முன், நடப்பு ஆண்டில் 3 முறை தேசிய சாதனையை முறியடித்து இருக்கிறார். அதனுடன், 200 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் மற்றொரு பதக்கம் வெல்லும் வாய்ப்பும் அவருக்கு உள்ளது.