சென்னை,
உலக செஸ் சாம்பியன்ஷிப்யில் நடப்பு சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனையை தேர்வு செய்வதற்கான கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் சைப்ரல் நாட்டில் நடந்து வருகிறது. 14 சுற்று கொண்ட இந்த போட்டியில் இதுவரை 12 சுற்று முடிந்துள்ளது.
பெண்கள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த ஆர்.வைஷாலி, சீனாவின் ஜூ ஜினெர் தலா 7 புள்ளிகளுடன் முதலிடத் தில் உள்ளனர். வைஷாலி எஞ்சிய இரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் அனேகமாக பட்டத்தை வென்று உலக போட்டிக்கு தகுதி பெற்று விடு வார். ஆனால் அது எளிதல்ல. இன்று நடக்கும் 13-வது சுற்றில் வைஷாலி, சீனாவின் டான் ஜோங்யியுடன் மோதுகிறார்.