டென்னிஸ்

பாரிஸ் ஓபன் அரையிறுதிக்கு முன்னேறினார் அல்காரஸ்

அரையிறுதியில் அல்காரஸ் - காஸ்பர் ரூட் மோத உள்ளனர்.

பாரிஸ்,

பாரிஸ் ஓபன் அரையிறுதிக்கு அல்காரஸ் முன்னேறினார்.

நெருக்கடி

பிரான்சில் நடைபெற்று வரும் பாரிஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் செட்டை டெய்லர் பிரிட்ஸ் 7-6 (12-10) எனக் கைப்பற்றினார். இதனால் அல்காரஸுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

அதிரடி வெற்றி

இரண்டாவது செட்டிலும் பிரிட்ஸ் கடும் சவால் அளித்தார். ஒரு கட்டத்தில் வெற்றிக்கு மிக அருகில் சென்ற அவர், இரண்டு போட்டிப் புள்ளிகளையும் பெற்றார். ஆனால், அவற்றைச் சிறப்பாகத் தடுத்து விளையாடிய அல்காரஸ், 7-5 என இரண்டாவது செட்டைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து மூன்றாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய அல்காரஸ் 6-3 என வெற்றி பெற்றார். இதன் மூலம் 6-7 (10-12), 7-5, 6-3 என்ற செட் கணக்கில் டெய்லர் பிரிட்ஸை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

அரையிறுதி

மற்ற காலிறுதிப் போட்டிகளில் அமெரிக்காவின் பென் ஷெல்டன், நார்வேயின் காஸ்பர் ரூட், பிரான்சின் லூகா வான் ஆஷ் ஆகியோரும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினர்.

இதையடுத்து அரையிறுதியில் பென் ஷெல்டன் - லூகா வான் ஆஷ், கார்லோஸ் அல்காரஸ் - காஸ்பர் ரூட் ஆகியோர் மோத உள்ளனர்.

SCROLL FOR NEXT