டூரின்,
ஏ.டி.பி. இறுதிச்சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அரையிறுதிக்கு ஸ்வரேவ் முன்னேறியுள்ளார்.
உலகின் முன்னணி 8 வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதிச்சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் டூரின் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் நடைபெற்ற லீக் போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வரேவ், பென் ஷெல்டனை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய ஸ்வரேவ், முதல் செட்டை 6-2 என எளிதாகக் கைப்பற்றினார்.
இரண்டாவது செட்டில் இருவரும் கடுமையாகப் போராடினர். இதனால் ஆட்டம் டைபிரேக்கருக்குச் சென்றது. அதில் 7-4 என்ற கணக்கில் வெற்றி பெற்ற ஸ்வரேவ், 6-2, 7-6 (7-4) என்ற நேர் செட்களில் ஆட்டத்தை முடித்தார்.
இந்த வெற்றியின் மூலம் லீக் சுற்றில் தொடர்ந்து 2-வது வெற்றியைப் பதிவு செய்த ஸ்வரேவ், அரையிறுதிக்கு முன்னேறினார். பென் ஷெல்டன் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் அடுத்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
ஸ்வரேவ் தனது கடைசி லீக் போட்டியில் பிரான்ஸ் வீரர் ஆர்தர் பில்ஸை எதிர்கொள்ள உள்ளார்.