டென்னிஸ்

2024 தோல்விக்கு பதிலடி கொடுப்பாரா ஆண்ட்ரீவா? - சீனா ஓபன் டென்னிஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்

காலிறுதியில் எகடரீனா அலெக்ஸாண்ட்ரோவாவை எதிர்கொள்கிறார்.

பீஜிங்,

சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் மிர்ரா ஆண்ட்ரீவா காலிறுதிக்கு முன்னேறினார்.

காலிறுதி

சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டத்தில் 4-ம் நிலை வீராங்கனையான ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா, உக்ரைனின் டாரியா ஸ்னிகரை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மிர்ரா ஆண்ட்ரீவா, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் டாரியா ஸ்னிகரை வீழ்த்தினார்.

1 மணி நேரம் 3 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட ஆண்ட்ரீவா, வெற்றியைப் பதிவு செய்து சீனா ஓபன் தொடரின் காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் 19-ஆம் நிலை வீராங்கனையான எகடரீனா அலெக்ஸாண்ட்ரோவாவை எதிர்கொள்கிறார்.

இந்த சீசனில் 11-வது காலிறுதி

19 வயதான ஆண்ட்ரீவா, தனது தொழில்முறை டென்னிஸ் வாழ்க்கையில் 2-வது முறையாக சீனா ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இதற்கு முன்பு 2024-ம் ஆண்டு சீனா ஓபனில் காலிறுதிக்கு முன்னேறிய அவர், அந்த ஆட்டத்தில் சீனாவின் ஜெங் சின்வென்னிடம் தோல்வியடைந்திருந்தார்.

SCROLL FOR NEXT